P R E S I D E N T S F U N D
  • info@presidentsoffice.lk
  • +94 11 2354354
சமூகம் :
சமூகம் :

பிரிவெனாக்கள் மற்றும் சீலமாதா கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவ பிக்குமார்கள், சீலமாதாக்கள் மற்றும் இல்லறவாசி மாணவ மாணவிகளுக்கு சனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டம் - 2024/2025


க.பொ.த.(உ.த.) கற்பதற்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவ மாணவிகளுக்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் சனாதிபதி நிதியம் ஆகியன ஒன்றிணைந்து வழங்கும் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டம் 2024-/2025


2022(2023) இல் நடைபெற்ற கா.பொ.த (சாதாரண தரம்)தேர்வு முடிவுகளின் அடிப்படையில் கா.பொ.த ( உயர் தரம்) படிக்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்கான பரிந்துரைக்கப்பட்ட பெயர்பட்டியல்

ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டம்

க.பொ.த (சா/த) பரீட்சைக்கு முதல் தடவையாக தோற்றி சித்தியடைந்த க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றிய நிலையில் , நிதி நெருக்கடியுள்ள மாணவர்களுக்கு  புலமைப்பரிசில்களை வழங்க கௌரவ ஜனாதிபதி அவர்கள் தீர்மானித்துள்ளார்.

  • விண்ணப்பிப்பதற்கான தகுதி
    1. விண்ணப்பதாரியின் குடும்ப மாத வருமானம் 100,000/- ரூபாவினை விஞ்சாதிருத்தல் வேண்டும்.
    2. அரச பாடசாலை அல்லது கட்டணமில்லாத தனியார் பாடசாலையில் கல்விகற்கும் மாணவனாக /மாணவியாக இருத்தல் வேண்டும்.
    3. விண்ணப்பதாரர் முதல் தடவையாக க.பொ.த(சா/த) பரீட்சைக்கு தோற்றி க.பொ.த(உ/த) படிக்க முழுத்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • ஒரு கல்வி வலயத்திற்கு கிடைக்கும் புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை 50 ஆகும், மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட புலமைப்பரிசில்தாரர்களுக்கு க.பொ.த (உ.த) பரீட்சைக்குத் தோற்றும் வரை அதிகபட்சமாக 24 மாதங்களுக்கு மாதமொன்றுக்கு 6,000.00 ரூபா உதவித்தொகை வழங்கப்படுகின்றது.

ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டம் 2022(2023) நேர அட்டவணை

 

# செயல்கள் காலக்கெடுவை
1 அழைப்பு விண்ணப்பங்கள் 22.12.2023
2 அதிபர்களால் வலயக் கல்வி அலுவலகத்தில் கையளிப்பு 08.01.2024
3 வலயக் கல்விப் பணிப்பாளர்களால் மாகாணக் கல்வித் திணைக்களத்திடம் கையளிப்பு 29.01.2024
4 மாகாண கல்விப் பணிப்பாளர்களால் கல்வி அமைச்சின் செயலாளரிடம் கையளிப்பு 06.02.2024
5 கல்வி அமைச்சின் செயலாளரினால் ஜனாதிபதி நிதியத்திற்கு கையளிப்பு 12.02.2024
Top