P R E S I D E N T S F U N D
  • info@presidentsoffice.lk
  • +94 11 2354354
சமூகம் :
சமூகம் :

இல்லை. நோயாளி சார்பில் குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் வேறு உறுப்பினர் ஒருவர் இல்லாவிடின் கிட்டிய உறவினர் ஒருவர் விண்ணப்பிக்கலாம்.

  1. சனாதிபதி நிதியத்தின் வெப் தளமான www.presidentsfund.gov.lk  மூலம்
  2. சனாதிபதி நிதி அலுவலகத்திலிருந்து
  3. தபால்மூலம் பெற்றுக்கொள்ளலாம் (சனாதிபதி நிதிய அலுவலகத்துக்கு கோரிக்கைக் கடிதமொன்றை அனுப்புவதன்மூலம்)

அலுவலகம் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ளது. (கூடிய விபரங்களுக்காக  வெப் தளத்தில்  உள்ளடங்கியூள்ள வரைபடத்தைப் பார்க்கவூம்).

வாரத்தின் வேலைசெய்யூம் எந்த நாளிலும் மு.ப.8.30 – 4.15 இற்கும் இடையில்.

  1. உரியவாறு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்
  2. கிராம உத்தியோகத்தரின் பரிந்துரை மற்றும் பிரதேச செயலாளரின் அங்கீகாரத்துடனான வருமான அறிக்கை (ஒப்பம் மற்றும் பதவி முத்திரையுடன்)
  3. உரியவாறு பூர்த்திசெய்யப்பட்ட வவுச்சர் பத்திரம் (தேவை ஏற்படுமாயின் பயன்படுத்துவதற்காக)
  4. வைத்தியர் பரிந்துரையின் மூலப் பிரதி
  5. உரிய வைத்தியசாலையிலிருந்து பெறப்பட்ட செலவு மதிப்பீடு (Estimate)
  6. உரிய நோயாளி / விண்ணப்பதாரர் சனாதிபதி நிதியத்திடம் முன்வைக்கும் கோரிக்கை கடிதத்தின் பிரதி.
  7. கிராம உத்தியோகத்தரால் சான்றுப்படுத்தப்பட்ட பணம் வைப்பிலிடப்பட வேண்டிய வங்கிப் புத்தகம் (தேவை ஏற்படுமாயின் பயன்படுத்துவதற்காக) மற்றும் தேசிய அடையாள அட்டையின் நிழற்படப்பிரதியொன்று வீதம்

  1. உரியவாறு பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்ப படிவம்
  2. வைத்தியர் பரிந்துரையின் மூலப் பிரதி
  3. கிராம உத்தியோகத்தரின் பரிந்துரை மற்றும் பிரதேச செயலாளரின் அங்கீகாரத்துடனான வருமான அறிக்கை (ஒப்பம் மற்றும் பதவி முத்திரையுடன்)
  4. உரியவாறு பூர்த்திசெய்யப்பட்ட வவுச்சர் பத்திரம்
  5. வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுக்கள் (Receipts) / செலவுப் பட்டியல்களின் (Bills) மூலப் பிரதிகள்
  6. அறுவை சிகிச்சை மேற்கொண்ட வைத்தியரால் வழங்கப்படும் நோய் இனங்காணல் அறிக்கையின் பிரதி (Diagnosis report / Discharged Summary).
  7. உரிய நோயாளி /விண்ணப்பதாரரால் மருத்துவ உதவி கோரி சனாதிபதி நிதியத்துக்கு செய்யப்படும் விண்ணப்பக் கடிதம்.
  8. கிராம உத்தியோகத்தரால் சான்றுப்படுத்தப்பட்ட பணம் வைப்பிலிடப்பட வேண்டிய வங்கிப் புத்தகத்தினதும் தேசிய அடையாள அட்டையினதும் நிழற்படப் பிரதிகள்.

சத்திர சிகிச்சை /  சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மருத்துவசாலையிலிருந்து வெளியேறிய தினத்திலிருந்து 60 நாட்களுக்குள் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். (வார இறுதி நாட்கள் மற்றும் அரச விடுமுறை நாட்கள் உள்ளடங்கலாக)

காசோலையானது  நோயாளியின் பெயரில் வழங்கப்படுவதுடன் அது பதிவூத்தபாலில் நோயாளியின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

முடியாது. நிதியூதவி வழங்கப்படுவதானது முக்கியமாகப் பின்வரும் நோய்களுக்காகும்.
(நிதியூதவி வழங்கப்படும் நோய்கள்)

  1. இருதயச் சத்திர சிகிச்சை  (Heart Surgeries)
  2. சிறுநீரக மற்றும் இரத்தச் சுத்திகரிப்பு  (Kidney Transplantation or Dialysis)
  3. மூளை சத்திரசிகிச்சை  (Brain Surgeries)
  4. புற்றுநோய் சிகிச்சைகள (Cancer Treatment/drugs/Injections)
  5. எலும்பு மச்சை மறுநடுகை (Bone Marrow Transplantation)
  6. இடுப்பெலும்பு, முழங்கால், தோள் மற்றும் முழங்கை மறுநடுகைகள்    (Hip/Knee/Shoulder/Elbow Replacements)
  7. செவியின் சுருள்வளை மறுநடுகை சத்திரசிகிச்சை  (Cochlear Implant surgery)
  8. முதுகெலும்பின் பக்கவாட்டு வளைவுத் திருத்துகை  (Scoliosis)
  9. முதுகெலும்பு உருத்திரிபு (Spinal Cord Compression)
  10. செயற்கை பாதம் மறுநடுகை (Artificial Limb prosthesis)
  11. தலசீமியா நோயாளிகளுக்கு  (வடிசாற்றுத்தேறல் பம் ஒன்றைக் கொள்வனவூ செய்வதற்கு)  (Infusion Pump)
  12. ஈரல் மறுநடுகைகள்  (Liver Transplant)

சத்திரசிகிச்சை / சிகிச்சை பெறுவதற்கு முன்னர் அதற்காக  அதிமேதகு சனாதிபதி அவர்களின் அங்கீகாரம்  கிடைத்தால்  மருத்துவசாலைக்கு அனுமதிக்கும் திகதியை சனாதிபதி நிதியத்திற்குச் சமர்ப்பித்ததன் பின்னர் வகைகூறல் கடிதம்  மருத்துவசாலைக்கு அல்லது  உபகரணங்களை வழங்கும் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

 

புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சைகளுக்கான வகைகூறல் கடிதம் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன்னராகவூம் மற்றைய நோயாளிகளின் சத்திரசிகிச்சைகளுக்கான  வகைகூறல் கடிதத்தை 10 நாட்களுக்கு முன்னராகவூம் பெற்றுக் கொள்ளலாம்.

காசோலைகள் வழங்கப்படுவதானது காத்திருப்போர்  பட்டியலில் நோயாளிகளின் பதியப்படும்  ஒழுங்கின் அடிப்படையிலேயே இடம்பெறும். எவ்வாறாயினும் இக்காலப் பகுதி 3-5 நாட்கள் ஆகலாம்.

பிரதேச  மாவட்டச் செயலாளரின்  சிபார்சுடன் கூடிய விபரமானதொரு அறிக்கை பெற்றுக்கொண்டதன்பின் தீர்மானிக்கப்படும்.

Top