ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டதைத் தொடர்ந்து, 499 ஆம் இலக்க ஜல்தர கிராம அலுவலர் பிரிவில் உள்ள மருத்துவ உதவிப் பெறுபவருக்கு, கொழும்பு மாவட்டத்திற்கான பிரதிநிதியாக, ஹோமாகம பிரதேச செயலக அதிகாரிகளின் பங்கேற்புடன், முதல் கொடுப்பனவு 28.03.2025 அன்று வழங்கப்பட்டது.
ஜனாதிபதி நிதியத்தின் பரவலாக்கல் செயல்முறை தொடர்பாக, மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வசதி இப்போது அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை மேலும் வசதியான முறையில் பெற முடியும்.
மேலும் தகவலுக்கு, எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும் – www.presidentsfund.gov.lk
ஜனாதிபதி நிதியின் பரவலாக்கத்திற்குப் பிறகு, முதல் ஜனாதிபதி மருத்துவ உதவிக் கொடுப்பனவு இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத பிரதேச செயலகப் பிரிவில் 27.03.2025 அன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், பிரதேச செயலக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவ உதவி பெறுபவரின் வீட்டிற்குச் சென்று, தேவையான மருத்துவ உதவியை வழங்கினர்.
ஜனாதிபதி நிதியத்தின் பரவலாக்கல் செயல்முறை தொடர்பாக, மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வசதி இப்போது அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை மேலும் வசதியான முறையில் பெற முடியும்.
மேலும் தகவலுக்கு, எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும் – www.presidentsfund.gov.lk
மக்களுக்கு மிகவும் இலகுவான சேவைகளை வழங்கும் நோக்கில், ஜனாதிபதி நிதியமானது பிரதேச செயலாளர் அலுவலகங்கள் வரை பரவலாக்கப்பட்டுள்ளது. இதன்படி, இப்போது அனைவரும் ஜனாதிபதி நிதியத்திற்கு விண்ணப்பித்து பெறக்கூடிய அனைத்து சேவைகளையும் தங்களது பிரதேச செயலாளர் அலுவலகத்தின் மூலம் பெறலாம்.
இதுகுறித்த தகவல்களை எங்கள் சமூக ஊடகத்தளங்களில் தொடர்ச்சியாக பதிவிடப்படும். மேலதிக தகவல்களுக்கு கீழ்காணும் தொடர்பு வழிகளை பயன்படுத்தலாம்.
அஞ்சல் மூலம்:
செயலாளர், ஜனாதிபதி நிதியம்,
ஸ்டாண்டர்ட் சார்டட் கட்டிடம்,
ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01.
மின்னஞ்சல் மூலம்: prefund@presidentsoffice.lk
WhatsApp: 0740854527
வலைத்தளம்: https://www.presidentsfund.gov.lk/
Facebook: https://www.facebook.com/president.fund
ஜனாதிபதி நிதியத்தின் புதிய செயல் முறைக்கேற்ப புதிய அமைப்பினை அறிமுகப்படுத்தியதற்கு பின்னரான முதல் மருத்துவ உதவித்தொகை இன்று (2025.03.14) வழங்கப்பட்டது.
ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கும் மருத்துவ உதவித் திட்டம் 2025.02.07 முதல் பிரதேச மட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் பொதுமக்கள் தங்களது பிரதேச செயலாளர் அலுவலகம் வழியாக விண்ணப்பிக்க வசதி பெற்றுள்ளனர்.
இதற்கமைவாக, 2025.02.21 அன்று மாத்தறை மாவட்டத்திலுள்ள பஸ்கொட பிரதேச செயலாளர் அலுவலகம் மூலம் கணினி அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உரிய கட்டணங்கள் இன்று பஸ்கொட பிரதேச செயலாளர் அலுவலக அதிகாரிகளால் வழங்கப்பட்டன.
🔴 2025 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு கூடியது
🔴 பிரதேச மட்டத்தில் ஜனாதிபதி நிதிய சேவைகளை வழங்க அனுமதி
மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்துவதற்காக, கடமை நேரத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான ஜனாதிபதி நிதியிலிருந்து பணியாளர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கவும் திட்டம்
நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில், ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை கிராம மட்டத்திற்கு விரிவுபடுத்துவதற்கும் பிரதேச செயலகம் மூலம் சேவைகளை இணையவழி(ஒன்லைன் முறை) மூலம் வழங்குவதற்கும் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் 28 ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஜனாதிபதி நிதியத்தின் நன்மைகள் உண்மையாக மக்களைச் சென்றடையும் வகையில் வினைத்திறனான சேவைகளை வழங்கும் வகையில் திட்டம் தயாரித்தல், புதிய யோசனைகள் மற்றும் தற்போதுள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அரச மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருப்போர் பட்டியலில் அதிக எண்ணிக்கையிலானோர் காத்திருப்பது குறித்து இதன் போது ஆராயப்பட்டது. இதற்கான தீர்வாக கடமை நேரத்திற்குப் பிறகு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கும் அந்த சேவையை முன்னெடுக்கும் பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்க ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி ஒதுக்குவது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. தற்பொழுது இந்த முறைமை கராபிடிய மருத்துவமனையில் மாத்திரம் முன்னெடுக்கப்படுகிறது.எதிர்காலத்தில் அதனை தேசிய மருத்துவமனை, கண்டி பெரியாஸ்பத்திரி மற்றும் ரிச்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனை என்பவற்றிலும் முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வசதிகளை வழங்குவதை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதோடு க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகளை மையமாகக் கொண்டு புதிய திட்டங்களை ஆரம்பிப்பதற்கும் தற்பொழுது முன்னெடுக்கப்படும் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொசான் கமகே, பேராசிரியர் ஜே.ஆர்.பி. ஜயக்கொடி, முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத் சந்திரசிறி மாயாதுன்னே மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
🔴 ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது
🔴 புதிய தொழிநுட்பம் மற்றும் வலையமைப்பு மூலம் ஜனாதிபதி நிதியத்தின் சேவை மக்களுக்கு சமீபமாக வழங்கப்படும்
மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச செயலக மட்டத்தில் சேவை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க.
இதன்படி, கொழும்பில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஜனாதிபதி நிதிய அலுவலகத்தின் சேவைகளை நாடளாவிய ரீதியில் உள்ள 361 பிரதேச செயலக அலுவலகங்களிலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஐந்து பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டு இது தொடர்பில் முன்னோடித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் இத் திட்டத்தை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நிதியம் தொடர்பில் பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கும் வகையில் இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இணையம் மூலமான கலந்துரையாடலின் போதே இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி நிதியத்திற்கு புதிய டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வலையமைப்பு வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் ஊடாக மக்களுக்கு மிகவும் வினைத்திறன் மற்றும் பயனுள்ள சேவையை வழங்குவதற்காக செயலாற்றி வருவதாக ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே தெரிவித்தார்.
இதனூடாக எவராயினும் தமது பிரதேச செயலகத்தின் ஊடாக நோய்க்கு அமைவான கொடுப்பனவிற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், அது தொடர்பான ஆவணங்களை பிரதேச செயலகத்தினால் உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும்.
நோயாளர்களை தெரிவு செய்யும் முறை, அவர்களின் ஆவணங்களை தயாரிக்கும் முறை, ஜனாதிபதி நிதியத்தின் பொறுப்பு என்பன தொடர்பில் இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதுவரை கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டிடத்தின் 3வது மாடியில் இயங்கி வந்த ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகம் 2025 ஜனவரி 01 ஆம் திகதி முதல் புதிய இடத்தில் நிறுவப்பட உள்ளது.
இதன்படி, ஜனாதிபதி நிதியத்தின் புதிய அலுவலக வளாகம் கொழும்பு 01, ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள ஸ்டேண்டர்ட் சார்டர்ட் கட்டிடத்தின் தரைத்தளத்தில் நிறுவப்படுகிறது.
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வரும் பொதுமக்கள்,2025 ஜனவரி 1 முதல், கொழும்பு 01, ஜனாதிபதி மாவத்தை, ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள ஸ்டேண்டர்ட் சார்டர்ட் கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள அலுவலக வளாகத்திற்குச் சென்று சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
Top