P R E S I D E N T S F U N D
  • prefund@presidentsoffice.lk
  • +94 11 2354354
சமூகம் :
சமூகம் :

ஜனாதிபதி நிதியம் தென் மாகாணத்திற்கும் விரிவாக்கம்

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்துச் செயற்பாடுகளும் பிரதேச செயலகங்கள் வரை பரவலாக்கப்பட்டதன் காரணமாக, அதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேவேளையில், கணினி அடிப்படையிலான புதிய இணைய வழி முறைமை (Online System) தொடர்பில் பிரதேச செயலகங்களின் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு அறிவூட்டல் மற்றும் பயிற்சி அளிப்பது அத்தியாவசியமாகியுள்ளது.

அதன் அடுத்த கட்டமாக, 2025.07.05 அன்று மாத்தறை மாவட்ட செயலகத்தில், தென் மாகாணத்தில் உள்ள காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் ஜனாதிபதி நிதியம் தொடர்பான பணிகளில் ஈடுபடும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம், தென் மாகாணத்தில் ஜனாதிபதி நிதியத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, பயனாளிகளுக்கு உயர்தர சேவைகளை வழங்குவது, நவீனமயப்படுத்தப்பட்ட இணைய வழி முறைமைகளை அறிமுகப்படுத்துவது மற்றும் விரைவான சேவைகளை வழங்குவதற்கு தேவையான அறிவையும் பயிற்சியையும் வழங்குவது எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பை மையமாகக் கொண்டு குறிப்பிட்ட ஒரு சிலருக்கே நன்மைகளை வழங்கிய ஜனாதிபதி நிதியத்தை, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு நன்மைகளை வழங்கும் மக்கள் நிதியமாகச் செயற்படுத்துவது தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான ஆளும் சபையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இந்த நோக்கத்தை அடைவதற்காக, இவ்வாறான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் தற்போது மேல் மற்றும் வட மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், எதிர்காலத்தில் ஏனைய மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

Top