P R E S I D E N T S F U N D
  • prefund@presidentsoffice.lk
  • +94 11 4354250
சமூகம் :
சமூகம் :

கிழக்கு மாகாணத்திற்கான சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளும் பிரதேச செயலாளர்களின் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதன் காரணமாக, பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கணினி அடிப்படையிலான இணையவழி முறைமை (Online System) குறித்து, பிரதேச செயலாளர்களின் அலுவலகங்களில் பணியாற்றும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வும் பயிற்சியும் வழங்குவது அத்தியாவசியமாகியுள்ளது.

இந்த செயற்பாட்டின் அடுத்த கட்டமாக, 2025 ஜூலை 26 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஜனாதிபதி நிதியுடன் தொடர்புடைய பணிகளை மேற்கொள்ளும் விஷய அதிகாரிகளுக்காக நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்வின் நோக்கம், கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி நிதியின் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், அவர்களுக்குப் தரமான மற்றும் விரைவான சேவைகளை வழங்குவதும், நவீன இணையவழி முறைமையை அறிமுகப்படுத்துவதும், அதற்கான தேவையான அறிவும் பயிற்சியும் வழங்குவதுமாகும்.

முன்பெာ, கொழும்பு மத்திய நிலையத்தில் உள்ள சிலருக்கே மட்டுப்படுத்தப்பட்ட ஜனாதிபதி நிதியத்தை, இப்போது நாடெங்கும் வசிக்கும் மக்களுக்கு பயனளிக்கும் ஒரு தேசிய நிதியாக மாற்றுவது தற்போதைய ஜனாதிபதியின் மற்றும் நிர்வாக சபையின் முக்கியக் குறிக்கோளாகும். அந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக, இந்நாட்டின் மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இதுபோன்ற பயிற்சி நிகழ்ச்சிகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளன. மற்ற மாகாணங்களிலும் இவையே போன்ற நிகழ்ச்சிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன.

Top