புலமைப்பரிசில்கள்

புலமைப்பரிசில்கள்

க.பொ.த (உ.த) கற்பதற்காக சனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களைக் கோருதல்

2022 (2023) ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட க.பொ.த (சா.த) பரீட்சையில் முதல் முறையாகத் தோற்றி, 2025 ஆம் ஆண்டில் க.பொ.த (உ.த)பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார நெருக்கடி காணப்படுகின்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு மேன்மைதங்கிய சனாதிபதி அவர்கள் தீர்மானித்துள்ளார். பொருத்தமானவர்களைத் தெரிவுசெய்வதற்கு பின்வரும் தகுதிகளை பூர்த்தி செய்கின்ற மாணவனிடமிருந்து/மாணவியிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

  • விண்ணப்பிப்பதற்கான தகுதி
    1. விண்ணப்பதாரியின் குடும்ப மாத வருமானம் 100,000/- ரூபாவினை விஞ்சாதிருத்தல் வேண்டும்.
    2. அரச பாடசாலை அல்லது கட்டணமில்லாத தனியார் பாடசாலையில் கல்விகற்கும் மாணவனாக /மாணவியாக இருத்தல் வேண்டும்.
    3. விண்ணப்பதாரி 2022 (2023) ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட க.பொ.த (சா.த) பரீட்சையில் முதல் முறையாகத் தோற்றி, 2025 ஆம் ஆண்டில் க.பொ.த (உ.த) கற்பதற்கு முழுமையாக தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
  • ஒரு கல்வி வலயத்திற்கு கிடைக்கும் புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை 50 ஆகும், மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட புலமைப்பரிசில்தாரர்களுக்கு க.பொ.த (உ.த) பரீட்சைக்குத் தோற்றும் வரை அதிகபட்சமாக 24 மாதங்களுக்கு மாதமொன்றுக்கு 6,000.00 ரூபா உதவித்தொகை வழங்கப்படுகின்றது.
  • இது தொடர்பான பத்திரிகை அறிவித்தல் 2023.12.03 ஆம் திகதிய “சிலுமின, வாரமஞ்சரி மற்றும் சண்டே ஒப்சேவர்” ஆகிய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள அதேவேளையில், அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உரிய விண்ணப்பப்படிவங்கள் 2023.12.22 ஆம் திகதி அல்லது அத்திகதிக்கு முன்பதாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி பூர்த்திசெய்யப்பட்டு, அதிபரிடம் ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.

   

அறிவுறுத்தல் பத்திரம்              விண்ணப்ப படிவம்